முகப்பு
உலகம்

டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச்சுற்றியுள்ள மூன்று பகுதிகளுக்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது ஜப்பான் அரசு. 

Updated On : 8 ஜனவரி 2021, 3:26 pm IST
பகிர்:


டோக்கியோ: கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச்சுற்றியுள்ள மூன்று பகுதிகளுக்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது ஜப்பான் அரசு. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆண்டு இறுதி மற்றும் புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து தொற்று பரவலை தடுக்க, தேசிய அரவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் அறிவித்துள்ளார். 

பிப்ரவரி 7 ஆம் தேதி வரை, மக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், ஷாப்பிங் மால்கள் மற்றும் பள்ளிகள் திறந்திருக்கும். திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறும், மக்கள் கூட்டமாக கூடக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

மேலும் உணவகங்கள், பார்களை இரவு 8 மணிக்குள் மூடும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments