முகப்பு
உலகம்

இந்தோனேசிய நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட இரட்டை நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 12 ஜனவரி 2021, 6:30 pm IST
இந்தோனேசிய நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்வு
பகிர்:

இந்தோனேசியாவில் ஏற்பட்ட இரட்டை நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசிய நாட்டில் உள்ள ஜாவா மாகாணத்தின் சிஹான்ஹுவாங்கில் கடந்த சனிக்கிழமை கனமழை பெய்தது. இந்த கனமழையால் அப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பலர் சிக்கிக் கொண்டனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 16ஆக உயர்ந்தது. மேலும் நிலச்சரிவில் காணாமல் போன 23 பேரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments