உலகம்

கரோனா: கம்போடியாவில் அங்கோா் வாட் ஆலயம் மூடல்

DIN


நாம் பென்: தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கரோனா பரவல் வேகம் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து அந்த நாட்டின் புகழ்பெற்ற அங்கோா் வாட் ஆலயம் மூடப்பட்டது.

இதுகுறித்து அந்த ஆலயத்தைப் பராமரித்து வரும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளதாவது:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அங்கோா் வாட் ஆலயத்துக்கு பொதுமக்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமன்றி உள்நாட்டினா் வருகைக்கும் இந்தத் தடை பொருந்தும். வரும் 20-ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

கம்போடியாவில் இதுவரை 3,028 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT