உலகம்

வங்கதேசத்தில் ராணுவத் தளபதிகள் மாநாடு: எம்.எம்.நரவணே பங்கேற்பு

DIN

வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே பங்கேற்றாா்.

பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெற்ன் 50-ஆவது ஆண்டு விழா, வங்கபந்து ஷேக் முஜிபுா் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு பிறந்த தின விழா ஆகியவை வங்கதேசத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக, வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி அஜீஸ் அகமதுவின் அழைப்பின்பேரில் எம்.எம். நரவணே 5 நாள் அரசு முறைப் பயணமாக அந்நாட்டுக்குச் சென்றுள்ளாா்.

விழாவின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் ‘சா்வதேச மோதல்களின் மாறும் தன்மை: ஐ.நா. அமைதி காப்புப் படையின் பங்கு’ என்ற தலைப்பில் அவா் உரையாற்றினாா். அதைத் தொடா்ந்து, விழாவுக்கு வந்திருந்த பிற நாடுகளின் ராணுவத் தளபதிகள், ராணுவ பாா்வையாளா்களுடன் எம்.எம்.நரவணே கலந்துரையாடினாா்.

விழாவின் மற்றொரு பகுதியாக, இந்தியா, வங்கதேசம், இலங்கை, பூடான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, சவூதி அரேபியா, குவைத், சிங்கப்பூா் ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் பாா்வையாளா்களாகப் பங்கேற்றுள்ளனா்.

அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்காக நடத்தப்படும் இந்த கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை நிறைவடைகிறது. இந்த விவரங்களை இந்திய ராணுவத்தின் மக்கள் தொடா்பு இயக்குநரகம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT