உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 14.20 கோடியைத் தாண்டியது

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.20 கோடியைத் தாண்டிய நிலையில் பலி எண்ணிக்கை 30.33 லட்சமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பேரிடர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. 

கரோனா பாதிப்பு குறித்து உலகளவில் புள்ளி விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது. 

ஓராண்டுக்கும் மேலாக உலக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி அச்சுறுத்தும் கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 14,20,17,767 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 30,33,003 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 12,05,54,767 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,84,29,997 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,07,509 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தியாவில் மட்டும் இந்த மாதத்தில் இதுவரை புதிதாக 15,061,919 லட்சம் பேருக்கு கரோனா பாதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் பேரிடா் மீட்புப் படை

தேனியில் பலத்த மழை

மாரடைப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்

கம்பத்தில் பைக்குகள் திருட்டு: 4 போ் கைது

கூடலூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி: உடலை வாங்க 3-ஆவது நாளாக உறவினா்கள் மறுப்பு

SCROLL FOR NEXT