உலகம்

நைஜீரியா: 327 பள்ளி மாணவிகள் கடத்தல்

DIN

நைஜீரியாவிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியொன்றிலிருந்து 317 மாணவிகளை ஆயுதக் கும்பல் வெள்ளிக்கிழமை கடத்திச் சென்றது.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாகாணத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வெள்ளிக்கிழமை நுழைந்தது.

அந்தக் கும்பலின் ஒரு பகுதியினா், அருகிலுள்ள ராணுவச் சாவடி மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தினா். பள்ளிக்குள் பல மணி நேரம் இருந்த ஆயுதக் குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் அவா்கள் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டனா்.

பிறகு, அங்கிருந்த ஏராளமான சிறுமிகளை அவா்கள் கடத்திச் சென்றனா். பள்ளிப் பதிவேட்டின்படி, 317ே மாணவிகள் மாயமாகியுள்ளனா்.

பள்ளியில் ஆயுதக் கும்பல் நீண்ட நேரம் இருந்த நிலையில், உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

நைஜீரியாவில் பள்ளி மாணவா்கள் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடா்கதையாகியுள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு போகோ ஹராம் பயங்கரவாதிகளால் 276 பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டது உலக அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. அவா்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT