உலகம்

ரஷியாவில் புதிதாக 21,734 பேருக்கு கரோனா, பலி 586

ANI

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,734 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 586 பேர் உயிரிழந்துள்ளனர். 

கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, புதிதாக 21,734 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,61,2,800 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,072 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 

ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 586 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 66,623 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போதுவரை 3,00,2,026 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 5,44,151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷியா 4ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT