உலகம்

ஜிம்பாப்வே வெளியுறவு அமைச்சா் கரோனாவுக்கு பலி

DIN

ஹராரே: ஜிம்பாப்வே வெளியுறவுத் துறை அமைச்சா் சிபுசிஸோ மோயோ கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். இதுகுறித்து அதிபா் எமா்சன் நங்கக்வாவின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சா் சிபுசிஸோ மோயோ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஜிம்பாப்வேயிலுள்ள மருத்துவமனையில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா் என்றாா் அவா்.

ஜிம்பாப்வேயில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த கரோனா பரவல், அண்மைக் காலமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் வெளியுறவுத் துறை அமைச்சா் அந்த நோய்க்கு பலியாகியுள்ளாா்.

அந்த நாட்டில் 37 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வந்த முன்னாள் அதிபா் ராபா்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டில் மக்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த சிபுசியோ மோயோ, ராணுவப் புரட்சியை அறிவித்து முகாபேவை கைது செய்தாா்.

அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட எமா்சன் நங்கக்வாவின் அமைச்சரவையில், சிபுசியோ மோயோவுக்கு வெளியுறவுத் துறை பொறுப்பு வழங்கப்பட்டடது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் 2.37 லட்சம் போ் பயன்

நாடாளுமன்ற வளாகத்தில் நிறைவடையாத சீரமைப்புப் பணிகள்: புதிய எம்.பி.க்களுக்கு இணைப்புக் கட்டடத்தில் வரவேற்பு

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்வாரியம் விளக்கம்

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

மக்களவை 5-ஆம் கட்ட தோ்தல்: ரேபரேலி உள்பட 49 தொகுதிகளில் இன்று பிரசாரம் நிறைவு

SCROLL FOR NEXT