உலகம்

இந்தோனேசியாவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 27,913 பேருக்கு கரோனா

DIN

இந்தோனேசியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 27,913 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 27,913 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,56,851ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவால் இன்று மேலும் 493 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 60,027ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 13,282 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,15,147ஆக உயர்ந்துள்ளது. 
கரோனா தொற்று 34 மாகாணங்களில் பரவியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT