உலகம்

மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

DIN

மக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் உலக நாடுகளிடையே நிலவிவரும் நிலையில், மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "மக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும் முறையான பொது சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்காததாலும் டெல்டா வகை கரோனா பரவிவருகிறது. துரதிருஷ்டவசமாக, நாம் மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம்.

வைரஸ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதனால், பல வகை கரோனா பரவுகிறது. டெல்டா வகை கரோனா 111 நாடுகளில் தற்போது உள்ளது. இப்போது இல்லையென்றாலும், அதிகம் பரவுக்கூடிய கரோனாவாக அது மாறும் என எதிர்பார்க்கிறோம்.

சமீப காலமாக, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் விளைவு கரோனா பரவலும் இறப்பு எண்ணிக்கையும் குறைந்தது" என்றார்.

நான்காவது வாரமாக உலகளவில் கரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 10 வாரங்களாக இறப்பு எண்ணிக்கை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT