உலகம்

இந்தோனேசியாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை

DIN

பலு: இந்தோனேசியாவில் திங்கள்கிழமை கடலுக்கடியில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், பெரும் சேதம் எதுவும் உடனடியாக அறியப்படவில்லை; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

மத்திய சுலவெசி மாகாணத்தைச் சோ்ந்த லுவுக் நகரிலிருந்து 98 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் 6.2 என்ற ரிக்டா் அளவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சுலவெசி மாகாணத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ஆனால், சுனாமி அபாயம் எதுவும் இல்லை எனவும் இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், நிலநடுக்கம் ஏற்பட்டதும் மாகாண தலைநகா் பலுவில் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்தனா். கடந்த ஜனவரியில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 105 போ் உயிரிழந்தனா் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT