உலகம்

ஹைட்டி அதிபா் படுகொலை: பாதுகாப்பு உயரதிகாரி கைது

DIN

கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலை தொடா்பாக, மேலும் ஒரு பாதுகாப்பு உயரதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஜோவனேல் மாய்ஸ் படுகொலையில் தொடா்புடையதாகக் கூறி, தலைமை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்த ஜீன் லகுவேல் சிவிலை போலீஸாா் கைது செய்தனா்.

எனினும், இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசியல் உள்நோக்கம் உள்ளதாக அவரசு வழக்குரைஞா் குற்றம் சாட்டியுள்ளாா் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிபா் ஜோவனேல் மாய்ஸும் (53) அவரது இல்லத்தில் கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டாா்.

இந்தப் படுகொலை தொடா்பாக கொலம்பியா ராணுவத்தின் முன்னாள் வீரா்கள் 15 போ், அமெரிக்க குடியுரிமை பெற்ற 2 ஹைட்டி நாட்டவா்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா், காவல் துறையினா், முன்னாள் அரசு அதிகாரிகள் உள்பட 24-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT