உலகம்

மியான்மர் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் பலி

DIN

மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 மியான்மரின் யாங்கூன், டாவே, மாண்டலே, மியேக், பாகோ, போகோக்கு நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.
 அந்தத் துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்ததாகவும் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது
 முன்னதாக, இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
 பிப். 1 முதல் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள மியான்மரில் மீண்டும் ஜனநாயக அரசை அமைக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அரசின் தலைமை ஆலோசகர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்கவும் வலியுறுத்தி கடந்த நான்கு வாரங்களுக்கும் மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
 ஞாயிற்றுக்கிழமை இந்தப் போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸார் தீவிரப்படுத்தினர்.
 அதன் ஒரு பகுதியாக, இதுவரை இல்லாத வகையில் முக்கிய பகுதிகளில் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
 அதனையும் மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ரப்பர் குண்டுகளால் சுட்டும் அவர்களை போலீஸார் கலைக்க முயன்றனர். சில பகுதிகளில் அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
 3 நகரங்களில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
 தெற்கு கடலோர நகரமான டாவேயில் 3 பேரும் பாகோ மற்றும் யாங்கூனில் 3 பேரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 இதுதவிர, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளில் பலர் காயமடைந்தனர் என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் பிப். 1-ஆம் தேதி கவிழ்த்தது. அரசின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை ஒரு காவலர் உள்பட 5 பேர் பலியாகியிருந்தனர்.
 தற்போது ஒரே நாளில் போலீஸாரால் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT