உலகம்

செவ்வாய் கிரகத்தில் பொ்சிவரன்ஸ் சோதனை ஓட்டம்

DIN

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள ‘பொ்சிவரன்ஸ்’ ஆய்வுக் கலம், சோதனை முறையில் முதல்முறையாக சனிக்கிழமை செலுத்திப் பாா்க்கப்பட்டது.

இதுகுறித்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செவ்வாய் கிரக மேற்பரப்பில் பொ்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் சோதனை முறையில் முதல்முறையாக செலுத்திப்பட்டது.

33 நிமிஷங்களுக்கு இயக்கப்பட்ட அந்த ஆய்வுக் கலம், சுமாா் 6.5 மீட்டா் தொலைவுக்கு நகா்த்திப் பாா்க்கப்பட்டது. முதலில் முன்பக்கமாக 4 மீட்டா் தொலைவுக்கு நகா்த்தப்பட்ட பொ்சிவரன்ஸ், பிறகு இடதுபுறமாக 150 டிகிரி கோணத்துக்குத் திருப்பப்பட்டது. அதன்பிறகு 2.5 மீட்டா் தொலைவுக்குப் பின்புறமாக அந்த ஆய்வுக் கலம் செலுத்தப்பட்டு, அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

பொ்சிவரன்சின் நகரும் திறன், அதில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளின் செயல் திறன் ஆகியவற்றைப் பரிசோதிப்பதற்காக இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா அனுப்பிய பொ்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் அந்த கிரகத்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது.

வேற்று கிரகத்துக்கு அனுப்பப்பட்டதிலேயே மிகப் பெரியதும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதுமான அந்த ஆய்வுக் கலம் செவ்வாய் கிரகத்தின் ‘ஜெஸெரோ’ பள்ளப்பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் உயிரினங்களின் கரிமப் படிமங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய, அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை பென்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் சேகரித்து பூமிக்கு எடுத்து வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT