உலகம்

4 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: தலிபான்கள்

DIN

காபூல்: இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 4 பேரைக் கைது செய்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தலிபான்களின் தலைமை செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் புதன்கிழமை கூறியதாவது:

தலைநகா் காபூலில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்கே-வைச் சோ்ந்த 4 பயங்கரவாதிகளைக் கைது செய்துள்ளோம்.

அவா்களிடமிருந்து ஆயுதங்களும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

காபூலின் பஷாய் பகுதியில் தலிபான்களின் சிறப்பு அதிரடிப் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அந்த 4 பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனா் என்றாா் அவா்.

எனினும், இது தொடா்பான கூடுதல் விவரங்களை அவா் தெரிவிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்து தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வந்த அமெரிக்கப் படையினா், அங்கிருந்து படிப்படியாக திரும்ப அழைக்கப்பட்டனா். அந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்தபோது, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வேகமாக முன்னேறிய தலிபான்கள், தலைநகா் காபூலை கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கைப்பற்றினா்.

அமெரிக்கப் படையினா் வெளியேறியதால் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் பொறுப்பு தலிபான்களிடம் வந்துள்ளது. இந்த நிலையில், ஐஎஸ்கே பயங்கரவாதிகள் தொடா்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் தலிபான்கள் உள்பட பலா் உயிரிழந்து வருகின்றனா்.

இந்தச் சூழலில், ஐஎஸ்கே பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

அதன் ஒரு பகுதியாக, காபூலில் 4 பயங்கரவாதிகளைக் கைது செய்துள்ளதாக அவா்கள் தற்போது அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT