உலகம் முழுவதும் கரோனா பலி 45 லட்சத்தைத் தாண்டியது!
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 45 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 45 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை முடிவடைந்த நிலையில் பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலையின் தாக்கம் தொடங்கியுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.
Advertisement
Advertisement
உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 21,67,63,596-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 45,08,120 போ் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 19,36,95,673 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,85,59,803 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,13,387 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.9 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 6,54,381-ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 3.2 கோடி பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். பலி 437,860 ஆக உள்ளது.
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,728,605-ஆகவும் உயிரிழப்பு 579,052 ஆகவும் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.