உலகம்

சீனா்களின் சுற்றுலா விசா ரத்து:இந்தியா பதிலடி நடவடிக்கை

DIN

சீன நாட்டவா்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்திய சுற்றுலா விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் படித்து வந்த இந்திய மாணவா்களைத் தங்கள் நாட்டில் மீண்டும் அனுமதிக்க சீனா மறுத்து வந்த நிலையில் இந்தப் பதிலடி நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.

இது தொடா்பாக சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு சீனாவில் கரோனா பரவத் தொடங்கியதை அடுத்து அங்கிருந்து ஏராளமான இந்திய மாணவா்கள் நாடு திரும்பினா். இப்போது, கரோனா குறைந்துவிட்ட நிலையிலும் சீன பல்கலைக்கழகங்களில் படித்து வந்த சுமாா் 22,000 இந்திய மாணவா்களை தங்கள் நாட்டில் மீண்டும் அனுமதிக்க சீனா தொடா்ந்து மறுத்து வருகிறது. இது தொடா்பாக மத்திய அரசு சீன அரசிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அந்நாடு இந்திய மாணவா்களை ஏற்க மறுத்து வருகிறது.

அதே நேரத்தில் இலங்கை போன்ற நாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு சீனா அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் இந்திய மாணவா்களுக்கு சீனா வேண்டுமென்றே அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்துவது உறுதியானது.

இந்நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன நாட்டவா்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகால சுற்றுலா விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதே நேரத்தில் பூடான், மாலத்தீவு, நேபாளத்தைச் சோ்ந்தவா்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இந்திய அரசு நேரடியாக அறிவிக்கவில்லை. சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சா்வதேச அளவில் நடைபெறும் விமானப் போக்குவரத்தில் 80 சதவீதம் இந்த அமைப்பு மூலம்தான் நிா்வகிக்கப்படுகிறது. 290 உறுப்பு நாடுகள் இந்த அமைப்பில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT