உலகம்

ஒப்பந்தங்களை சீனா மீறியதால் இருதரப்பு உறவு பாதிப்பு

DIN

எல்லைப் பகுதியில் படைகளைக் குவிப்பதற்கு எதிராகக் கையொப்பமான ஒப்பந்தங்களை சீனா மீறியதால் இருதரப்பு நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

தென் அமெரிக்க நாடுகளுக்கான 6 நாள் அரசுமுறைப் பயணத்தை அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தொடங்கினாா். வெளியுறவு அமைச்சரான பிறகு தென் அமெரிக்க நாடுகளுக்கு அவா் பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.

முதல்நாடாக பிரேஸிலுக்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரை அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு அவா் பதிலளித்ததாவது:

இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடா்பாக 1990-களிலேயே ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. எல்லைப் பகுதிகளில் படைகளைக் குவிப்பதற்கு அந்த ஒப்பந்தங்கள் தடை விதிக்கின்றன. ஆனால், அந்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் சீனா படைகளைக் குவித்தது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவத்தினா் இடையேயான மோதல் விவகாரத்தை அனைவரும் அறிவா்.

அந்தப் பிரச்னைக்கு இன்னும் தீா்வு காணப்படவில்லை. அந்த விவகாரமே இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்லுறவை வலுப்படுத்துவது ஒருவழிப்பாதை அல்ல. பரஸ்பர நம்பிக்கையும் நடவடிக்கையும் அதற்கு அவசியம்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு கடினமான கட்டத்தில் உள்ளது. அண்டை நாடுகளுடன் இணக்கமான சூழலையே இந்தியா விரும்புகிறது. அதற்கு அந்நாடும் தயாராக இருக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதையுடன் இரு நாடுகளும் செயல்பட வேண்டும். பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் மட்டுமே இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த முடியும் என்றாா் அவா்.

Image Caption

பிரேஸிலின் சாவ் பாலோ நகரில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | செய்திகள்: சிலவரிகளில் | 14.05.2024

எங்கே என் அன்பே?

இது என்ன கோலம்! தீப்தி சுனைனா..

அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 வீரர்கள்...

SCROLL FOR NEXT