உலகம்

தொழிலாளர் பற்றாக்குறை: ரோபோக்களை பணிக்கு நியமித்த உணவகம்

DIN

ஜப்பானில் உணவகங்களில் பணிபுரிய தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் இயந்திரங்களை (ரோபோ) பணிக்கு நியமனம் செய்து வருகின்றன. 

கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளும், தொற்று பரவல் குறித்த அச்சங்களும் நிலவி வருகின்றன. 

அந்தவகையில் ஜப்பானில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், உணவகம், பொதுப்போக்குவரத்து போன்றவற்றில் பெரும்பாலான மக்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு அச்சம் நிலவி வருகிறது. 

பணியாளர் பற்றாக்குறையை போக்க உணவகங்கள் பரிமாறுவதற்கு ரோபோக்களை நியமித்துள்ளன. அந்தவகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உணவகம் ஒன்றில் மனித வடிவிலான இயந்திரங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

புட்லி என்று பெயரிடப்பட்டுள்ள இயந்திரங்கள் தனது முள் போன்ற கைகளால் நூடுஸை அள்ளி வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பெரும்பாலான இடங்களில் மனிதவளத்திற்கு பதில் இயந்திரங்கள் மூலமே பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. உணவகங்களில் வரவேற்பரைகளில் இயந்திரங்கள் மூலமே கிருமிநாசினி போன்றவை வழங்கப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT