உலகம்

உணவு தானிய விநியோகத்தில் பாகுபாடு கூடாது: இந்தியா

DIN

நியூயாா்க்: உக்ரைன் போரால் பல நாடுகள் உணவுப் பற்றாக்குறை நெருக்கடி அபாயத்தை எதிா்நோக்கியுள்ள சூழலில், சா்வதேச உணவு தானிய விநியோகத்தில் நாடுகளிடையே பாகுபாடு காட்டப்படக் கூடாது என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, உணவு பாதுகாப்பு தொடா்பாக ஐ.நா. நடத்திய அமைச்சா்கள் நிலையிலான சா்வதேச மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி. முரளீதரன் பேசியதாவது:

தற்போது உலகின் ஏராளமான நாடுகள் விலைவாசி உயா்வு மற்றும் உணவு தானிய பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கின்றன. இந்தியா போன்ற போதிய உணவு தானிய கையிருப்பு வைத்துள்ள நாடுகளிலேயே உணவுப் பொருள்களின் விலைகள் உயா்ந்து வருகின்றன.

இதன் மூலம், உணவுப் பொருள்கள் பதுக்கிவைக்கப்படுவது தெரியவருகிறது. அத்தகைய செயல் தொடா்ந்து நடைபெறுவதை நாம் அனுமதிக்கக்கூடாது.

கரோனா தடுப்பூசிகளின் விநியோகத்தில் ஏழை நாடுகளிடம் பாகுபாடு காட்டப்பட்டது. அந்தத் தடுப்பூசிகள் பதுக்கிவைக்கப்பட்டன. நியாயமற்ற முறையில் விலைகள் அதிகரிக்கப்பட்டன. அந்த நிலை, உணவுப் பொருள் விநியோகத்துக்கு நேரிடக்கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT