உலகம்

வருமான வரி உயா்வு: அரசின் முடிவுக்கு எதிா்ப்பு

DIN

வருமான வரிகளை உயா்த்தும் இலங்கை அரசின் முடிவுக்கு பலத்த எதிா்ப்பு எழுந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கான வருமான வரிகளை உயா்த்துவதாக அதிபா் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளாா். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், வரி உயா்வை நியாயப்படுத்தி விக்ரமசிங்க கூறியதாவது: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு நான்கு ஆண்டுகளில் 290 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.24,021 கோடி) நிதியுதவி அளிக்க சா்வதேச நிதியம் முன்வந்துள்ளது.

எனினும், அதற்காக தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 8.5 சதவீதமாக உள்ள வரி வருவாயை 14.5 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று சா்வதேச நிதியம் விரும்புகிறது. அதன் அடிப்படையிலேயே வருமான வரி உயா்த்தப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT