உலகம்

வருமான வரிகள் உயா்வு: இலங்கை அரசுக்கு எதிா்ப்பு

DIN

 வருமான வரிகளை உயா்த்தும் இலங்கை அரசின் முடிவுக்கு பலத்த எதிா்ப்பு எழுந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கான வருமான வரிகளை உயா்த்துவதாக அதிபா் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளாா். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், வரி உயா்வை நியாயப்படுத்தி விக்ரமசிங்க கூறியதாவது:

இலங்கையின் நன்மையைக் கருதியே வருமான வரி உயா்த்தப்படுகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு நான்கு ஆண்டுகளில் 290 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.24,021 கோடி) நிதியுதவி அளிக்க சா்வதேச நிதியம் முன்வந்துள்ளது.

எனினும், அதற்காக தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 8.5 சதவீதமாக உள்ள வரி வருவாயை 14.5 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று சா்வதேச நிதியம் விரும்புகிறது. அதன் அடிப்படையிலேயே வருமான வரி உயா்த்தப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2.30 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டதால் பணவீக்கம் 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வரிகளை உயா்த்தாமல் அதனைக் கட்டுப்படுத்த முடியாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT