உலகம்

இன்ஸ்டா - பேஸ்புக் குறுஞ்செய்தி சேவையை ரத்து செய்கிறது மெட்டா!

DIN

பிரபல சமூகவலைதள நிறுவனமான மெட்டா, கடந்த 2020-ம் ஆண்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இடையேயான குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தியது. 

இன்ஸ்டாகிராமிலிருந்து பேஸ்புக் நண்பர்களுக்கும், பேஸ்புக்கின் மெசஞ்சர் (Messenger) செயலி மூலம் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பையும் பெற்றது.  

இந்நிலையில், குறிப்பிட்ட நாளைத் தெரிவிக்காத மெட்டா, டிசம்பர் மாதத்தோடு அந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

இனி, இந்த வசதி மூலம் குறுஞ்செய்தி அல்லது அழைப்புகள் செய்யமுடியாது எனினும், ஏற்கனவே இருக்கும் உரையாடல்களை படிக்க மட்டும் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது மெட்டா. 

மெட்டா, தனது மெசஞ்சர் தளத்தை என்ட்-டூ-என்ட் (end-to-end encryption) முறைக்கு மாற்றவிருப்பதால் இந்த சேவையை நிறுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

இன்று அமோகமான நாள்!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT