உலகம்

காஸாவில் பலியாகும் இஸ்ரேல் பிணைக் கைதிகள்! உறவினர்கள் போராட்டம்!

DIN

காஸாவில் ஹமாஸுடனான சண்டையின் போது மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளைத் தவறுதலாகக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து தெல் அவிவில் பிணைக் கைதிகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களால் இஸ்ரேல் கைதிகளும் இறந்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் இஸ்ரேல் தாக்குதல்களை இன்றுவரை நிறுத்திக்கொள்ளவில்லை. 

சுட்டுக்கொள்ளப்பட்ட 3 இஸ்ரேல் பிணைக் கைதிகள், சட்டை அணியாமல் வெள்ளை நிறக் கொடியைக் கையில் ஏந்திவந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த சம்பவம் என் நெஞ்சயும், ஒட்டு மொத்த நாட்டின் நெஞ்சயும் உடைத்துவிட்டது எனவும் போரில் எங்கள் வீரியம் குறையாது எனவும் தெரிவித்துள்ளார். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்துகின்றனர்.

தெல் அவிவில் நடந்து வரும் போராட்டத்தில் பேசிய 19 வயது பிணைக்கைதியின் தந்தை, 'மக்களை உயிருடன் கொண்டு வருவதுதான் முக்கியமெனில், ஹமாஸுக்கு பெரிய சலுகை வழங்கி மீட்டு விடலாமே! எங்கள் உறவினர்களை உயிருடன் மீட்டுக் கொடுங்கள்' எனத் தெரிவித்துள்ளார். 

பிணைக் கைதிகளைக் காப்பாற்றாமல் போர் நிறுத்தம் இருக்காது என இஸ்ரேல் தெரிவித்துவரும் நிலையில், மூத்த ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்தான் போரை நிறுத்தி ஹமாஸின் நிபந்தனைகளை நிறைவேற்றாதவரை எந்தக் கைதியும் விடுதலை ஆக மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT