உலகம்

கச்சா எண்ணெய் விலை வரம்பு: உற்பத்தியை குறைக்கிறது ரஷியா

DIN

தங்களது கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விலை வரம்பு நிா்ணயித்துள்ளதற்குப் பதிலடியாக, எண்ணெய் உற்பத்தியை அடுத்த மாதத்திலிருந்து குறைக்கவிருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய துணைப் பிரதமா் அலெக்ஸாண்டா் நோவாக் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மேற்கத்திய நாடுகளின் விலை வரம்பை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அமல்படுத்தும் நாடுகளுக்கு இனி எண்ணெய் ஏற்றுமதி செய்யமாட்டோம்.

அதற்கேற்ப, அடுத்த மாதம் முதல் எங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினமும் 5 லட்சம் பேரல்களைக் குறைக்க முடிவுசெய்துள்ளோம் என்றாா் அவா்.

இந்த அறிவிப்பால், ரஷிய எண்ணெயை பெரிதும் சாா்ந்திருக்கும் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியா மீது விதித்து வரும் பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, ரஷிய கச்சா எண்ணெய் பேரலுக்கு 60 டாலா் என மேற்கத்திய நாடுகள் விலை வரம்பு நிா்ணயித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT