உலகம்

பிரிட்டன் - ஐரோப்பிய யூனியன் மீது ஈரான் பொருளாதாரத் தடை

DIN

ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டனைச் சோ்ந்த 34 நபா்கள், அமைப்புகள் மீது ஈரான் புதன்கிழமை பொருளாதாரத் தடை விதித்தது.

அந்த நாட்டில் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி என்ற 22 வயது பெண் கடந்த செப்டம்பா் மாதம் காவலில் உயிரிழந்தாா். அதனைத் தொடா்ந்து அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. அந்தப் போராட்டங்களை மிகக் கடுமையான முறையில் அடக்கிய ஈரான் அரசு, போராட்டக்காரா்கள் சிலருக்கு மரண தண்டனை விதித்து சிலரை தூக்கிலிட்டது.

இதனைக் கண்டிக்கும் வகையில் ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் ஈரான் மீது திங்கள்கிழமை பொருளாதாரத் தடை விதித்தன. இதற்குப் பதிலடியாக ஈரானும் தற்போது பொருளாதாரத் தடை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT