உலகம்

காங்கோவில் குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தல்

DIN


காங்கோவின் வடக்குப் பகுதியில் மூன்று கிராமங்களிலிருந்து குழந்தைகள் உள்பட 22 பேரை ஆயுதம் தாங்கிய கும்பல் கடத்திச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை நிற ராணுவ சீருடை அணிந்திருந்த ஆயுதம் தாங்கிய ஏழு பேர், ஆங்கோ நகரத்தை ஒட்டிய மூன்று கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

பல ஆண்டு காலமாக மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற ஏராளமான ஆயுதம் தாங்கிய குழுக்கள், நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றவும், இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவும், தங்களது சமுதாய மக்களை காப்பாற்றவும் பல்வேறு விதமான சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.

செவ்வாயன்று 22 பேர் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. தங்கள் பகுதிக்கு போதிய பாதுகாப்பு அளிக்காததே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்று ஆங்கோ பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எல்லைப் பகுதி எப்போதும் திறந்திருக்கும்.எந்த ராணுவமும் ஏன் காவல்துறை கூட பாதுகாப்பு கொடுக்காது என்று அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

இன்று அமோகமான நாள்!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT