மீண்டும் தொடங்கும் போர்!
போர் நிறுத்த காலம் முடிவடைந்த நிலையில் இஸ்ரேல் காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம், வெள்ளிகிழமை அதிகாலையோடு முடிவடைந்த நிலையில் மீண்டும் போர்த் தொடங்கவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஹமாஸ் போர் நிறுத்த விதிகளை மீறியுள்ளதாகவும் அதனால் இஸ்ரேல் மீண்டும் காஸா பகுதியில் தாக்குதலைத் தொடங்கவுள்ளதாகவும் தெரித்துள்ளது.
ஆரம்பத்தில் நான்கு நாள்கள் தொடங்கிய போர் நிறுத்தம் அதன் பிறகு 2 நாள்களுக்கு நீடிக்கப்பட்டது. இதனை நீடிக்க மத்தியஸ்தர்கள் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
எந்தவிதமான நீட்டிப்புக்கான அறிகுறியும் தென்படாத சூழலில் வடக்குக் காஸாவில் துப்பாக்கிச் சூடும் குண்டுவீச்சும் நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் ராணுவம், காஸாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை இடைமறித்ததாகத் தெரிவித்துள்ளது.
அந்த ஏவுகணை ஹமாஸால் தவறுதலாக தாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் இஸ்ரேலுக்கு அழுத்தம் அளித்து போர் நிறுத்தத்தை நீடிக்க செய்வதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ஹமாஸ் 83 இஸ்ரேலியர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்டவர்களையும் 23 தாய்லாந்து மற்றும் பிலிப்பினோ நாட்டைச் சேர்ந்தவர்களையும் தனது பிடியில் இருந்து விடுவித்துள்ளது. இவர்களில் பெண்கள், குழந்தைகள், ஆண்களும் அடக்கம்.
இஸ்ரேல், மோதலில் ஈடுபட்ட பாலஸ்தீன இளைஞர்கள் உள்பட 240 பேரை விடுவித்துள்ளது.
இதையும் படிக்க: ஜெருசலேமில் துப்பாக்கிச்சூடு: 3 இஸ்ரேலியா்கள் உயிரிழப்பு
முன்னதாக வியாழக்கிழமை கிழக்கு ஜெருசலேமில் 2 பாலஸ்தீனர்கள், 6 இஸ்ரேலியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது இஸ்ரேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.