இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம் ஏபி
உலகம்

இனி ஆபாச படங்களுக்கு இடமில்லை: இன்ஸ்டாகிராமின் புதிய வசதி!

இணையதள செய்திப்பிரிவு

படங்கள், விடியோக்கள் பகிரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் செயலியின் நேரடி குறுஞ்செய்திகள் பகுதியில் அனுப்பப்படும்/ பெறப்படும் ஆபாச படங்கள் இனி மங்கலாக்கப்படும் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.

பாலியல் மோசடிகளுக்கு எதிரான இன்ஸ்டாகிராம் முன்னெடுப்பின் பகுதியாக இந்த புதிய வசதியை சோதித்து பார்த்து வருவதாக இன்ஸ்டாகிராமின் இணையத்தள பதிவு தெரிவிக்கிறது.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா மீது இளம்வயதினரின் பெற்றோரிடம் இருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்தாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க செனட் சபையில் இது தொடர்பாக மெட்டா நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில் ஆபாச படங்களை மங்கலாக்கும் வசதி 18 வயதுக்கு குறைவாக இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மட்டும் எனவும் 18 வயது நிரம்பியவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியுடன் படங்கள் பார்ப்பதற்கான வசதி அளிக்கப்படும் எனவும் இன்ஸ்டாகிராம் தெரிவிக்கிறது.

மெட்டாவின் மற்ற செயலிகளில் இந்த வசதி அறிவிக்கப்படவில்லை.

பாலியல் மோசடியில் ஈடுபவர்கள் போலி கணக்குகளில் இருந்து இளம் வயதினருக்கு ஆபாச படங்கள் அனுப்பி, அவர்களின் ஆபாச படங்களையும் பெற்று விடுகிறார்கள். பின்னர் அதை வைத்து மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.

இப்படியான புகார்கள் தொடர்ச்சியாக பெறப்பட்டு வருவதாக அமெரிக்க காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT