Francisco Seco
Francisco Seco
உலகம்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

DIN

ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வடக்கு உக்ரைன் நகரான செர்னிஹிவ் மீது புதன்கிழமை ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அடுத்தடுத்து 3 ஏவுகணைகள் 8 மாடிக் கட்டடத்தின் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 3 குழந்தைகள் உள்பட 61 பேர் படுகாயங்களுடன் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா - பெலாரஸ் எல்லையில் அமைந்துள்ள செர்னிஹிவ் மாகாணத்தில் 2.5 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் உதவியுடன் உக்ரைன் சமாளித்து வந்தாலும், ரஷியாவின் வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றது.

குளிர்காலத்தை கருத்தில் கொண்டு தீவிர போரை நடத்தாமல் இருந்த ரஷியா, உக்ரைனின் ஆயுத தட்டுப்பாட்டை அறிந்து தற்போது போரில் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ள 80 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளுக்கு இன்னும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் உக்ரைன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் உரிய காலத்தில் ஆயுதங்களை கொடுத்திருந்தால் செர்னிஹிவ் மீதான தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு அழுத்தம்

வட இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாசு நுண் துகள்கள்: ஜோத்பூா் ஐஐடி ஆய்வு

உதவி பேராசிரியா் தகுதித் தோ்வு பயிற்சி வகுப்பு

காவிரி ஆணைய தீா்மான நகல் எரிப்பு போராட்டம்

பாஜக நாகரிக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT