கோப்புப்படம்
கோப்புப்படம் 
உலகம்

ஹமாஸ் பிடியிலிருந்து இரு பிணைக் கைதிகள் மீட்பு! இஸ்ரேல் அறிவிப்பு!

DIN

காஸா பகுதியிலிருந்து இரு பிணைக் கைதிகளைத் திங்கள்கிழமை அதிகாலையில் மீட்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்திய திடீர் தாக்குதலின்போது இஸ்ரேலுக்குள் புகுந்து, கிபுட்ஸ் நிர் யிஷாக் என்ற இடத்திலிருந்து ஏராளமான பொதுமக்களைப் பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிரிவினர் கடத்திச் சென்றனர்.

பெர்னாண்டோ சிமோன் மர்மன் (60), லூயி ஹர் (70) என்ற இருவர் மீட்கப்பட்டதாக ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ரஃபா நகரின் தெற்கு எல்லைப் பகுதியிலிருந்து இவர்கள் மீட்கப்பட்டதாகவும் இருவருமே நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்தது.

ஹமாஸ் பிடியிலுள்ள 136 பிணைக் கைதிகளில் இவர்களும் இருந்தனர் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT