முகப்பு
உலகம்

டிரம்ப்பின் சொத்து சூறையாடப்படும்: பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான நிலத்தில் பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை

Updated On : 9 மார்ச் 2025, 2:41 pm IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பகிர்:

காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும் என்று பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹமாஸின் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், காஸாவை மத்திய கிழக்கின் சுற்றுலாத் தளமாக மாற்ற இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தத்துக்கான தனது முன்மொழிவைக் கூறியிருந்தார்.

காஸாவைக் கைப்பற்றவிருப்பதாக டிரம்ப் சமீபத்திய கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஸ்காட்லாந்தில் உள்ள டிரம்ப்புக்கு சொந்தமான டர்ன்பெர்ரி கோல்ஃப் ரிசார்ட்டுக்குள் புகுந்த சில பாலஸ்தீன ஆதரவாளர்கள், மைதானத்தை சேதப்படுத்தினர். `காஸா விற்பனைக்கு அல்ல’ என்றும் இது டிரம்பின் திட்டங்களுக்கு நேரடி பதில் என பெயின்டால் புல்தரையில் எழுதியுள்ளனர்.

Advertisement

Advertisement

அதுமட்டுமின்றி, `காஸாவைக் கைப்பற்ற நினைத்தால், டிரம்ப்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments