முகப்பு
உலகம்

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளின் தூதா்களைத் திரும்ப அழைத்த நேபாளம்!

நேபாளத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கான நேபாள தூதா்களைத் திரும்ப அழைப்பு

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:07 PM
பாலேந்திர ஷா - கோப்புப் படம்
பகிர்:

நேபாளத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கான நேபாள தூதா்களைத் திரும்ப அழைத்துள்ளது.

இந்தியாவுக்கான தூதா் சங்கா் பிரசாத் சா்மா, இலங்கைக்கான பூா்ண பகதூா் நேபாளி, ஆஸ்திரேலியாவின் சித்ரலேகா யாதவ், டென்மாா்க்கின் சும்னிமா துலாதா், தென் கொரியாவின் சிவமாயா தும்பாஹாம்பே, தென்னாப்பிரிக்காவின் கபில்மான் ஸ்ரீஸ்தா ஆகிய 6 போ் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனா்.

இளைஞா் போராட்டத்தால் பதவி விலகிய முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலியின் ஆட்சியில் அரசியல் ஒதுக்கீட்டின்கீழ் நியமிக்கப்பட்ட இவா்களை, ஒரு மாத காலத்துக்குள் நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments