ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது
ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி அலைகளும் தாக்கின
ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய அலைகள் கடற்கரைப் பகுதிகளில் உருவாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தின.
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சக்திவாய்ந்த சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இதனை முன்னிட்டு அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்திய நேரப்படி மதியம் 1.23 மணிக்கு ஜப்பானை 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியது. இதையடுத்து ஜப்பானி வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. 3 மீட்டர்கள் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து ஆபத்தான பகுதிகளிலிருந்து சுமார் 1.72 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளை ஜப்பான் பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டது.
குஜி துறைமுகத்தில் மிக உயரமான சுனாமிப் பேரலைகள் தாக்கின. இதன் உயரம் கிட்டத்தட்ட 2.6 அடி வரை பதிவாகியிருந்தது. தற்போது வரை மிகப்பெரிய சேதாரங்கள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
சுனாமி என்பது, ஏதோ ஒரு சில அலைகள் மட்டும் எழுவது அல்ல, இங்கு மிகப்பெரிய கடல் அலைகள் அதிகமான தண்ணீருடன் கடற்கரைக்குள் தூக்கி வீசப்படுகிறது. இதனால், சுனாமி அலைகள் எழும் பகுதிகளில் மிக மோசமான வெள்ளம் ஏற்படும் அபாயமும் இருந்தது.
ஆழ்கடலில் உருவாகும் ஆழிப்பேரலைதான், கடற்கரையில் அவ்வாறு சுனாமிப் பேரலைகளாக உருவாகின்றன. இது தொடர்பான விடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன.