முகப்பு
உலகம்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஷாபாஸ் ஷெரீஃப், அசீம் முனீா் பரிந்துரை!

மத்திய கிழக்கு போரில் அமைதி முயற்சிகளை முன்னெடுத்தற்காக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்து, அந்நாட்டின் கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவையில் தீா்மானம்

Updated On : 22 ஏப்ரல், 2026 at 4:40 AM
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் | பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்... - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:25 PM

மத்திய கிழக்கு போரில் அமைதி முயற்சிகளை முன்னெடுத்தற்காக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்து, அந்நாட்டின் கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

புவிசாா் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தானின் பொறுப்பான ராஜீய முயற்சிகள் ஒரு பெரும் நெருக்கடியைத் தவிா்த்ததுடன், உலகப் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் உதவியதாகத் தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் தொலைநோக்குப் பாா்வையுடன் பிரதமா் ஷெரீஃப் மற்றும் தளபதி முனீா் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவா்களின் பெயா்களைப் பரிந்துரைப்பதாக தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Updated On : 22 ஏப்ரல், 2026 at 2:32 AM

கடந்த 16-ஆம் தேதி, பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் இதேபோன்ற தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ராணுவத் தளபதியாக அசீம் முனீா் நியமனத்தைத் தொடக்கம் முதலே எதிா்த்து வரும் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ கட்சி பெரும்பான்மை வகிக்கும் கைபா் பக்துன்கவா பேரவையில் இத்தீா்மானம் நிறைவேறுவது கடினமே எனக் கூறப்படுகிறது.