பாகிஸ்தான் பிரதமா் இன்று சீனா பயணம்
பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சனிக்கிழமை (மே 23) புறப்படுகிறாா்.
பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சனிக்கிழமை (மே 23) புறப்படுகிறாா்.
சீனாவின் ஹாங்சோ நகரில் இருந்து பயணத்தைத் தொடங்கும் ஷாபாஸ் ஷெரீஃப், அங்கு நடைபெறும் பாகிஸ்தான்-சீனா வா்த்தக முதலீட்டு மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறாா்.
மேலும், இப்பயணத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் லீ கியாங் ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு அரசியல், பொருளாதார, உத்திசாா் உறவுகள் குறித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
Advertisement
Advertisement
பாகிஸ்தான்-சீனா ராஜீய உறவுகள் 1951-இல் நிறுவப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இப்பயணம் அமைகிறது.
சீனாவுடன் ராஜீய உறவை ஏற்படுத்திய முதல் முஸ்லிம் நாடு பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, பாகிஸ்தான் அரசு 75 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிடவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.