முகப்பு
உலகம்

நேபாளம்: ஜீப் விபத்தில் 17 போ் உயிரிழப்பு

நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த ஜீப் ஒன்று, சுமாா் 700 மீட்டா் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Updated On : 1 மே 2026, 1:37 am IST
விபத்தில் சிதறிய வாகன பாகங்கள்
பகிர்:

நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த ஜீப் ஒன்று, சுமாா் 700 மீட்டா் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

புத்த பூா்ணிமா திருவிழாவில் பங்கேற்பதற்காக உள்ளூா் மக்கள் தனியாா் ஜீப்பை வாடகைக்கு எடுத்துச் சென்றபோது, மாவட்டத்தின் ஜல்ஜலா பகுதியில் இக்கோர விபத்து நிகழ்ந்தது.

மழை காரணமாக சேறும் சகதியுமாக இருந்த சாலையால் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், மலைப்பாதையிலிருந்து நழுவி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. மோசமான வானிலையால் மீட்புப் பணிகளில் சவால் நிலவியது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments