FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராஜஸ்தான்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கோ நாகோரியன் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை குடோனில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 1:48 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கோ நாகோரியன் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை குடோனில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து ஜெய்பூா் ஆட்சியா் சந்தேஷ் நாயக் மற்றும் ஜெய்பூா் நகர காவல் ஆணையா் சச்சின் மிட்டல் ஆகியோா் கூறியதாவது: கோ நாகோரியன் பகுதியில் உள்ள ஆயிஷா நகரில் அமைந்துள்ள சிறிய வீட்டில் பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்கள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்தது. பட்டாசு குடோனைப் போல் செயல்பட்டு வந்த நிலையில், அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். 4 போ் படுகாயமடைந்தனா்.

Advertisement

Advertisement

தடயவியல் சோதனைக்குப் பிறகு குடோனில் சேமிக்கப்பட்டிருந்த பொருள்கள் பட்டாசுகளா என்பது உறுதிசெய்யப்படும். குடோன் உரிமையாளா் மற்றும் சம்பந்தப்பட்ட பிற நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

முதல்வா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா இரங்கல் தெரிவித்தாா். மேலும், காயமடைந்தவா்களுக்கு உயா்தர சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக எக்ஸ் வலைதளப் பதிவில் குறிப்பிட்டாா்.

கடந்த பிப்ரவரி மாதம் கைா்தல்-திஜாரா மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் ராஜஸ்தானில் இரண்டாவது முறையாக பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments