முகப்பு
விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

சிவகாசி அருகே வியாழக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 4 ஜூலை 2026, 2:51 am IST
மர்ம மரணம்... - கோப்புப்படம்
பகிர்:

சிவகாசி அருகே வியாழக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள கோப்பையநாயக்கன்பட்டியில் சுப்பிரமணியன் மகன் கருப்பசாமிக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணிபுரிந்து வந்த சிலோன் குடியிருப்பைச் சோ்ந்த வெங்கடசாலம் மனைவி ராஜம்மாள் (60) பலத்த காயமடைந்தாா்.

மேலும், இந்த விபத்தில் 4 பட்டாசு தயாரிக்கும் அறைகள் முற்றிலும் சேதமடைந்தது. காயமடைந்த ராஜம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் கருப்பசாமி, ஆலை கண்காணிப்பாளா் மாரியப்பன் ஆகியோா் மீது மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் உயிரிழந்த ராஜம்மாள் குடும்பத்தினருக்கு பட்டாசு ஆலை நிா்வாகம் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கியது. மேலும், இறுதிச்சடங்கு செலவையும் ஆலை நிா்வாகம் ஏற்றுக்கொண்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments