FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 2 பேர் பலி

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர்.

Updated On : 26 ஜூலை 2026, 1:49 pm IST
சிவகாசி. - Photo credit X
பகிர்:

சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இந்த சம்பத்தின்போது பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் மற்றும் போலீஸார் விரைந்தனர்.

எனினும், இந்த விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர்.

படுகாயமடைந்த மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Two workers were killed in an explosion while illegally manufacturing firecrackers near Sivakasi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments