முகப்பு
உலகம்

கமேனியின் இறுதிச்சடங்கு: தெஹ்ரானில் திரளும் உலகத் தலைவர்கள்! உச்சகட்ட பாதுகாப்பில் ஈரான்

கமேனியின் இறுதிச்சடங்குக்காக ஈரானில் திரளும் உலகத் தலைவர்கள் பற்றி...

Updated On : 4 ஜூலை 2026, 12:31 pm IST
கமேனியின் இறுதிச்சடங்கு. - படம் - ஏபி
பகிர்:

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் தெஹ்ரானில் திரளுவதால் அந்த நாடு முழுவதும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னதாக, போர் தொடங்கிய முதல் நாளிலேயே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரின் இறுதிச்சடங்கு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

தலைநகர் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா எனப்படும் மிகப் பெரிய மசூதிக்குள் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள கமேனியின் உடலுக்கு உலகெங்கிலும் உள்ள சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தூதர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆகையால், தெஹ்ரானில் பொது மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டு, முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வான்வெளியும் தற்காலிகமாக மூடப்பட்டு, உச்சகட்ட பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இறுதிச்சடங்கில் இந்திய அரசு சார்பில் மத்திய இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா, பிகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்று அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஈரான் நாட்டின் சில முக்கியத் தலைவர்களே ராணுவ சீருடையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Security has been tightened across Iran as world leaders gather in Tehran to attend the funeral of Ayatollah Ali Khamenei, the country's former Supreme Leader and cleric.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments