கமேனியின் இறுதிச்சடங்கில் அஞ்சலி செலுத்திய இந்திய மதத் தலைவர்கள்!
கமேனியின் இறுதிச்சடங்கில் இந்திய மதத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தியது பற்றி...
அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் இந்திய மதத்தலைவர்கள் பங்கேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 3) அஞ்சலி செலுத்தினர்.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், கத்தார், பாகிஸ்தான் தலைமையில் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, போர் தொடங்கிய முதல் நாளிலேயே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரின் இறுதிச்சடங்கு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
தலைநகர் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா எனப்படும் மிகப் பெரிய மசூதிக்குள் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள கமேனியின் உடலுக்கு பல்வேறு நாட்டின் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய அரசு சார்பில் மத்திய இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா, பிகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் அஞ்சுமன் இ ஷாரியே ஷியான் அமைப்பின் தலைவர் ஆகா சையத் ஹசன் மொசாவி உள்பட இந்து, சீக்கியம், முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த இந்திய மதத் தலைவர்கள் குழுவாகச் சென்று கமேனியின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
Indian religious leaders participated in the funeral of Iranian Supreme Leader Ayatollah Ali Khamenei—who was killed by the United States and paid their respects on Friday (June 3).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.