முகப்பு
உலகம்

இலங்கை சிறைச்சாலை கலவரத்தில் 25 பேர் பலி! தமிழக மீனவர்களின் நிலை என்ன?

இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் பலியானது பற்றி...

Updated On : 6 ஜூலை 2026, 6:03 pm IST
நீர்கொழும்பு சிறையின் வெளியே நிற்கும் பாதுகாப்புப் படையினர். - AP
பகிர்:

இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 4 சிறை அதிகாரிகள் உள்பட 25 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் பலர் இந்தச் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Advertisement

Advertisement

காயமடைந்த அனைவரும் நீர்கொழும்பு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்டவர்களில் பலியானோர் மற்றும் காயமடைந்தோர் பலரின் உடல்களில் துப்பாக்கிச் சூடு காயங்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கலவரத்திற்கான காரணம் என்ன?

இன்று காலை சிறைக் கைதிகளில் சிலர் கும்பலாக இணைந்துத் தாக்குதல்கள் நடத்தியதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த வன்முறைச் சம்பவம் வெடித்துள்ளது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து அதனைக் கட்டுக்குள் கொண்டுவரவும், தாக்குதலைத் தடுக்கவும் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சிறைக் கைதிகளுக்குள் நடைபெற்ற மோதல் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்றைய மோதல் தீவிரமான வன்முறைச் சம்பவமாக மாறியுள்ளது.

பெண் கைதிகள் பலரும் சிறையின் கட்டடங்கள் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலவரம் தொடர்பாக விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரி ஏசி கஜநாயகே தெரிவித்துள்ளார். சிறைத்துறை தலைமை ஆணையரின் உத்தரவின் பேரில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை சார்பில் தனியே விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டத்துறை அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார இந்த மோதல்கள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

summary

25 killed in Sri Lankan prison riot! What is the plight of the Tamil Nadu fishermen?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments