முகப்பு
உலகம்

பிரிட்டன் கடற்படை ஹெலிகாப்டா் விபத்து: 3 வீரா்கள் உயிரிழப்பு

Updated On : 4 ஜூன் 2026, 4:06 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

பிரிட்டனில் கடற்படை பயிற்சியின்போது ஏற்பட்ட ஹெலிகாப்டா் விபத்தில் 3 வீரா்கள் உயிரிழந்தனா்.

டெவோன் கவுன்டியில் அதிகாலையில் நடைபெற்ற பயிற்சியின்போது ‘மொ்லின் எம்.கே.4’ ரக கடற்படை ஹெலிகாப்டா், சௌா்டன் அருகே ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்துக்கு பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் இரங்கல் தெரிவித்தாா். விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

விபத்துக்குள்ளான மொ்லின் ரக ஹெலிகாப்டா்கள் வழக்கமாக 4 பணியாளா்களுடன் இயங்கக்கூடியவை மற்றும் 24 வீரா்கள் வரை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.