துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!
துபை விமான நிலையங்களிருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!
துபை விமான நிலையங்களிருந்து, துபை நேரப்படி இன்று(மார்ச் 2) மாலை முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அந்நாட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனினும், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என்றும், ஏற்கெனவே முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகளுக்காக விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், அதுவரை பயணிகள் எவரும் விமான நிலையங்களுக்கு வருகை தர வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானுடன் அமெரிக்கா, இஸ்ரேல் கூடாக சண்டையிட்டு வருகின்றன. இதையடுத்து, மத்திய கிழக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக வான் வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் துபையில் 2 சர்வதேச விமான நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 1) மூடப்பட்டன.
Advertisement
Advertisement
இந்நிலையில், துபை விமான நிலையங்களிருந்து, துபை நேரப்படி இன்று(மார்ச் 2) மாலை முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஃப்லை துபை, எமிரேட்ஸ் விமானங்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விமான சேவை குறித்த அண்மைத் தகவல்களை அந்தந்த விமான நிறுவனங்களின் இணைய வலைதளங்களிலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பார்த்து பயணிகள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Dubai Airports confirms that a limited resumption of operations will begin today evening, 2 March
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.