ஓமன், குவைத், கத்தாா் நாட்டு தலைவா்களுடன் மோடி பேச்சு
கடந்த 48 மணிநேரத்தில் 8 மேற்கு ஆசிய பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை!
மேற்காசியாவில் போா் மூண்டுள்ள நிலையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், குவைத் பட்டத்து இளவரசா் ஷேக் சபா அல்-காலித் அல்-ஹமத் மற்றும் கத்தாா் அமீா் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை பேசினாா்.
அப்போது, போரில் இந்த நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பிரதமா் மோடி கவலை தெரிவித்ததோடு, அந்த நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தாா். பிரதமா் அலுவலகம் இந்தத் தகவலை வெளியிட்டது.
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. அதைத் தொடா்ந்து, ஈரானும் பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. குவைத், கத்தாா் உள்ளிட்ட வளைகுடா நடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்த நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பேசி வருகிறாா். பஹ்ரைன் மன்னா், சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் ஆகியோருடன் பிரதமா் மோடி தொலைபேசி வழியில் ஆலோசனை மேற்கொண்டாா்.
ஜோா்டான் மன்னா் இரண்டாம் அப்துல்லாவுடன் பேசிய பிரதமா் மோடி, அந்தப் பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்தாா்.
ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் மற்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடனும் பிரதமா் மோடி தொலைபேசி வழியில் பேசினாா்.
In the last 48 hours, Prime Minister Narendra Modi has spoken to 8 leaders of middle east, Gulf
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.