பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 8 பேர் பலி
பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர்.
பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர்.
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரயில் சனிக்கிழமை மோதியது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மத்திய பகுதியில் உள்ள விமான நிலைய ரயில் இணைப்பு நிலையம் அருகே, பிற்பகலில் இந்த விபத்து நடந்ததாக தாய்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
விபத்தின்போது எடுக்கப்பட்ட காணொளிகள் சமூகஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதில், ரயில்வே கிராசிங்கில் வாகனங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தபோது, சரக்கு ரயில் ஆரஞ்சு நிறப் பேருந்தின் முன்புறத்தில் மோதுகிறது.
மோதிய வேகத்தில் அருகிலிருந்த பல வாகனங்கள் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது.
நிகழ்விடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்தின்போது பல இருசக்கர வாகனங்களும் அவற்றின் ஓட்டுநர்களும் சாலையில் தூக்கி வீசப்பட்டதும் காணப்பட்டது.
A train crashed into a public bus on Saturday in Thailand's capital, Bangkok, killing at least eight people.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.