இனி, சாட்ஜிபிடியால் பயனரின் வங்கிக் கணக்கைப் பார்க்க முடியும்! எப்படி? ஏன்?
இனி, சாட்ஜிபிடியால் பயனரின் வங்கிக் கணக்கைப் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபன் ஏஐ தற்போது தன்னுடைய பயனர்களுக்கு நிதித்துறை சார்ந்த புதிய சேவையை சாட்ஜிபிடி மூலம் வழங்கவிருக்கிறது.
சாட்ஜிபிடியில், பயனர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு, முதலீட்டுக் கணக்குகளை இணைத்துவிட்டால் போதும், உங்கள் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை ஜல்லடைப்போட்டு சலித்துச் சொல்லிவிடும் சாட்ஜிபிடி.
ஆனால் இந்த வசதி தற்போதைக்கு அமெரிக்காவில் உள்ள ப்ரோ பயனர்களுக்கு மட்டுமே. இவர்கள் மாதத்துக்கு 200 டாலர்கள் செலுத்தி இந்த சேவையை பெற்று வருகிறார்கள். பிறகு, இது பிளஸ் பயனர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து அனைவருக்குமாக மாறும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
சாட்ஜிபிடியில் பயனரின் வங்கிக் கணக்கை இணைத்துவிட்டால், அதில் பயனருக்கான பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். அதில், பயனரின் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது, முதலீட்டு வாய்ப்பு, மாதத் தவணைகள், வரவேண்டிய பணம் என அனைத்தையும் அது ஒரே இடத்தில் தொகுத்து பயனருக்கு சிறப்பான நிதி ஆலோசனைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சேவையின் மூலம் பயனர்கள், வழக்கமான அளவை விட கூடுதலாக செலவிடுகிறேனா? என்னால் ஐந்து ஆண்டுகளுக்குள் வீடு வாங்க முடியுமா? வேறு எந்த தவணைகளை செலுத்தாமல் இருக்கிறேன்? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளை அறியலாம்.
இதற்கு ஒபன்ஏஐயின் ப்ரோ பயனர்கள் @Finances என்று டைப் செய்து அதில் என்னுடைய வங்கிக் கணக்கை இணைக்க என்ற வாய்ப்பைத் தெரிவு செய்ய வேண்டும்.
இந்த சேவை மூலம் சாட் ஜிபிடியால், பயனரின் வங்கியின் பண இருப்பு, பணப்பரிமாற்றம், முதலீடுகள், கடன்களை அறிந்து கொள்ள முடியும். ஆனால், வங்கிக் கணக்கில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பார்க்க முடியாது.
ஒருவேளை, பயனருக்கு மனமாற்றம் ஏற்பட்டால், சாட் ஜிபிடியிலிருந்து வங்கிக் கணக்கைத் துண்டித்துக் கொள்ளலாம். நிதித்துறை தரவுகளை முற்றிலும் நீக்கிவிடலாம்.
Now, ChatGPT can view a user's bank account! How? Why?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.