இனி கூகுள் தேவையில்லை... முகநூலில் ஏஐ வசதி! என்னென்ன சிறப்புகள்?
முகநூலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏஐ சிறப்புகள் குறித்து...
முகநூலிலும் செய்யறிவு (ஏஐ) வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கூகுளில் பெறக்கூடிய தகவல்களைப் போன்று முகநூலிலேயே தகவல்களை பயனர்களால் பெற முடியும் என மெட்டா தெரிவித்துள்ளது.
அதாவது, கூகுள் தனது தளத்தில் பதிவான செய்திகளை, தரவுகளை பயனர்களின் கேள்விகளுக்கு ஏற்ப திரட்டி பதில்களாகத் தருவதைப்போன்று, முகநூலில் உள்ள செய்யறிவும், முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவுகள், விடியோக்கள், குழு கலந்துரையாடல்களின் தகவல்களை திரட்டி பதில்களைத் தரும்.
பயனர்கள் கூடுதலாகத் தகவல்களைப் பெற இனி முகநூல் செயலியில் இருந்து வேளியேறி மற்ற இணையப் பக்கங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. முகநூலில் கொடுக்கப்பட்டுள்ள ஏஐ அடிப்படையிலான தேடல் வசதியைப் பயன்படுத்தி, முகநூல் தளத்திலேயே பதில்களைப் பெற முடியும்.
Advertisement
Advertisement
தரவுகள் தேவைப்படும்போது, முகநூலில் பதிவுகளைத் தேட வேண்டும் என்ற நிலை மாறி, தற்ஓது கொடுக்கப்பட்டுள்ள ஏஐ வசதியை கிளிக் செய்து கேள்வியை உள்ளீடு செய்தால், பதில்கள் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முகநூல் ஏஐ சிறப்புகள்
பயனர்களின் கேள்விகளுக்கு வெறும் லிக்குகளை மட்டும் காட்டாமல், முகநூலில் பதிவிட்ட பதிவுகளையும் கேள்விகளுக்கு ஏற்ப முகநூல் ஏஐ காட்டும்.
இதனால் தகவல்களை யார் பதிவிட்டார்கள் என்பதை முதற்கொண்டு அறிந்து, அந்தத் தகவல் உண்மையானதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
புகைப்படங்களை எடிட் செய்து பதிவேற்றம் செய்வதற்கு புதிதாக ஏஐ டூல் அம்சம் இடம்பெற்றுள்ளது. இதனால் முன்பை விட எளிமையாகவும் கூடுதலாகவும் புகைப்படம் மற்றும் விடியோக்களை எடிட் செய்துகொள்ளலாம்.
கேமரா ரோல் பகிர்வு பரிந்துரைகளை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திவைத்துக்கொள்ளலாம்.
பயனர்களின் கேள்விக்கு மெட்டா ஏஐ உதவியுடன் முகநூலிலேயே பதில்களைப் பெற முடியும். முகநூல் தளத்தில் பதிவிடப்பட்ட பதிவுகள், குழு விவாதங்கள், ரீல்ஸ் பதிவுகளைக் கொண்டு பதில்களையும் புதிய கண்ணோட்டத்தையும் வழங்கும்.
நண்பர்களுக்கு அதீத எண்ணிக்கையில் உள்ள புகைப்படங்களை விடியோக்களாக எடிட் செய்து எளிமையாக பகிர முடியும்.
New AI Tools to Facebook Help You Make Things Happen like Google
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.