தவறுதலாக நடந்துவிட்டது! மோடி விடியோ பிளாக் செய்யப்பட்டது குறித்து ஃபேஸ்புக் விளக்கம்
தவறுதலாக நடந்துவிட்டதாக மோடி விடியோ பிளாக் செய்யப்பட்டது குறித்து ஃபேஸ்புக் விளக்கம் கொடுத்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு குறித்து ஜென்ஸி தலைமுறையினருக்கு பிரதமர் மோடி வெளியிட்ட செல்ஃபி விடியோ, தவறுதலாக பிளாக் செய்யப்பட்டுவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி விடியோ தவறுதலாக நீக்கப்பட்டு பிறகு அது சரி செய்யப்பட்டுவிட்டது என்று மெட்டா செய்தித் தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் விடியோ நீக்கப்பட்டது குறித்து மெட்டா நிறுவத்துக்கு மத்திய அரசு சார்பில் சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் இந்த சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் விடியோ, ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த நிலையில், அதனை கிளிக் செய்த போது அது கிடைக்கவில்லை என்று சிறிது நேரம் வந்தது. சற்று நேரத்தில் மீண்டும் விடியோ வெளியானது. இது குறித்து தகவல் அறிந்து மத்திய அரசு அதிர்ச்சி அடைந்தது.
கடந்த வாரம் நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த போது, பிரதமர் நரேந்திர மோடி, போராடும் மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நள்ளிரவில் செல்ஃபி விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் மத்திய அமைச்சரவை இது குறித்து விவாதம் நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
"எனக்குத் தெரியும், வினாத்தாள் கசிவு என்பது சாதாரண நிகழ்வு அல்ல, லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது" என்றும் பிரதமர் மோடி அந்த விடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
It happened by mistake! Facebook explains why Modi's video was blocked.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.